Books For Children
ஆர்தரின் சூரியன்
ஆர்தரின் சூரியன்
ஆர்தருக்கு பாட்டி என்றால் உயிர். அவன், பாட்டியின் தீராத கால்வலியைப் போக்க எண்ணினான். சூரிய ஒளி பட்டால் மூட்டுவலி காணமல்போகும் என்று பாட்டி சொன்னதைக் கேட்ட ஆர்தர் வெளியே எட்டிப் பார்க்கிறான். மழை நாட்களில், சூரியன் பகல் நேரம் முழுவதும் முகம் காட்டுவதில்லை. சூரியனை முகம் காட்டவிடாமல் மறைத்துவைத்திருக்கும் கருமேகங்களை என்ன செய்யலாம்? அதை விடுவிக்கச் சொல்லி அன்பான வார்த்தைகள் பேசியும் நகர்ந்து செல்லாத மேகங்களை, பொம்மைத் துப்பாக்கியால் சுடுவதைத் தவிர வேறென்ன செய்வது? ஆனாலும் சூரியனுக்கு மேகங்களிடமிருந்து விடுதலை கிடைக்கவில்லை. பிறகு என்ன செய்வது? பாட்டியின் கால்வலியைக் குணமாக்க வேறு என்ன வழி? ஒரு காகிதத்தைத் தேடி எடுத்து, சூரியனை வரைந்து வண்ணம் தீட்டுகிறான் ஆர்தர். பாட்டியின் காலுக்கு அருகில் அந்த ஓவித்தை வைத்துவிட்டுக் காத்திருக்கிறான். பாசம் நிறைந்த ஓர் அப்பாவிச் சிறுவன் பாட்டியின் கால் வலியைச் சரிசெய்த உற்சாகத்தில் மகிழ்ச்சி அடைகிறான். வாசிக்கும் நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறான்.
ஆர்தரின் சூரியன்,books for children,artharin suriyan ,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.