Save 20%
சென்னை மாநகர், மா. சு. சம்பந்தன், தமிழ் திசை
சென்னை மாநகர், மா. சு. சம்பந்தன், தமிழ் திசை

சென்னை மாநகர்

✔ Product highlights

Rs. 160 Rs. 200 /
Subscription -

ஏறக்குறைய நானூறு ஆண்டுகால சென்னையின் நதிமூலத்தை நம் கண்முன் நிறுத்துகிறது மா.சு.சம்பந்தன் எழுதியிருக்கும் `சென்னை மாநகர்' என்னும் இந்நூல். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் எல்லோரையுமே தகவல் பணக்காரர்களாக்கியிருக்கிறது. ஆனால், அதுபோன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் இந்நூலினை எழுதியிருக்கும் மா.சு.சம்பந்தன் எத்தனை புத்தகங்களை படித்திருப்பார், எவ்வளவு குறிப்புகளை எடுத்திருப்பார், எத்தனை இடர்களை எதிர்கொண்டிருப்பார் என்பதை இந்நூலில் இடம்பெற்றிருக்கும் மலைப்பான தகவல்கள், நம்மை எண்ண வைக்கின்றன.

தோற்றுவாய், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலம், சுற்றுப்புறத்து ஊர்கள், 15, 16ஆம் நூற்றாண்டின் சூழ்நிலை, ஆங்கிலேயர் வருகை, ஆட்சிக் காலம், நகர வளர்ச்சி, சென்னையின் சிறப்பு - என ஒன்பது தலைப்புகளில், முறையே பண்டைய சென்னையின் தொன்மையான வரலாறு துலக்கமான ஆவணமாக இந்நூலில் வெளிப்பட்டிருக்கிறது.

இன்றைக்கும் நாம் கடந்து போய்க்கொண்டிருக்கும் அண்ணா சாலை (மலைச்சாலை), பிராட்வே (பிரகாசம் சாலை), ஹாமில்டன் பாலம் போன்றவற்றுக்குப் பின்னணியில் இருக்கும் வரலாறு தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், கல்வி, மருத்துவம், சுகாதாரம், உடல் நலம் போன்றவற்றில் முன்னத்தி ஏராக சென்னையே அந்தக்காலத்தில் விளங்கியதையும் ஆதாரபூர்வமாக இந்நூலின் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.

இந்தியாவின் கலாச்சார தலைநகராக சென்னையை இன்றைக்கு நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அதற்கான விதை நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் இசை, பண்பாடு, பக்தி போன்ற பின்புலங்களில் எப்படி உண்டானது என்பதும், அதற்காக உழைத்த மாமனிதர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதும் ஒன்றுவிடாமல் இந்நூலில் பதிவாகியிருப்பது இந்நூலின் சிறப்பு.

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மா. சு. சம்பந்தன்
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
240

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like