{"product_id":"kohinoor","title":"கோஹினூர்","description":"\u003cp\u003eஉலகின் மிக மதிப்பு மிக்க பொக்கிஷங்களுள் ஒன்று கோஹினூர் வைரம். பொக்கிஷம் மட்டுமல்ல அது. அதிகாரத்தின் அடையாளமும்கூட. அதனால்தான் கோஹினூரைக் கைப்பற்றுவதற்கு, சாமானியர்கள் தொடங்கி பேரரசர்கள் வரை பலர் முயன்றிருக்கிறார்கள். பல்வேறு சூழ்ச்சிகளும் பல்வேறு படுகொலைகளும் இந்த வைரத்துக்காக அரங்கேறி இருக்கின்றன. இந்தியாவின் கரங்களிலிருந்து அதனைக் கைப்பற்றிய பிரிட்டன் இன்றுவரை திருப்பி அளிக்க மறுக்கிறது. கோஹினூர் எந்த வகையில் தனித்துவமானது? எப்படி அது புகழ்பெற்ற வைரமாக மாறியது? அதன் தொடக்கப்புள்ளி என்ன? கோஹினூருக்கான போராட்டங்களில் யாரெல்லாம் பங்கேற்றிருக்கிறார்கள்? யார் கரங்களில் எல்லாம் சென்றதோ அவர்களை எல்லாம் கோஹினூர் வீழ்த்தியது என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டா? கோஹினூர் சபிக்கப்பட்ட வைரமா? முகலாயர்களில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டு‌ வரையிலான அரசியல் வரலாற்றின் பின்னணியில் கோஹினூரின் கதையை விறுவிறுப்பாக விவரித்திருக்கிறார் ராம் அப்பண்ணசாமி. ஒரு வைரத்தின் வரலாறாக அல்லாமல் பேரரசுகளின் வரலாறாக, முடிவுறாப் போராட்டங்களின் வரலாறாக, அரசியல் சதிப்பின்னல்களின் வரலாறாக, உரிமைக் குரலின் வரலாறாக இந்நூல் உருப்பெற்றிருக்கிறது.\u003c\/p\u003e","brand":"கிழக்கு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390394929455,"sku":"BK1507","price":171.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kohinoor.jpg?v=1788008291","url":"https:\/\/siruvarbooks.com\/products\/kohinoor","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}