Books For Children
மாணவர் மனசு
மாணவர் மனசு
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
‘மாணவர் மனசு’ படித்தேன். மிக மிகப் புதிதாக இருந்தது. மொழியும் புதுமை; குழந்தையோடு குழந்தையாய் ஆசிரியர்
பெறும் அனுபவமும் புதுமை. குழந்தைகளின் மொழி, விளையாட்டு, வருத்தம் , கொண்டாட்டம் – ஒவ்வொன்றும் அருமை. குழந்தைகளின் சுதந்திரம், ஆசிரியரிடம் அவர்களுக்கு இருக்கும் உரிமை – வாசித்து வாசித்துத் திளைத்தேன். வாசித்துச் சுவைக்கத் துணையாக இருப்பது – உங்கள் மொழி. நகைச்சுவை நிறைந்த மொழி. உணர்ச்சி ததும்பும் மொழி. பெருமையும் பெருமிதமுமாய் மனதில் நிறைந்த மொழி. வேடிக்கையும் விளையாட்டும் நிரம்பிய குழந்தைகள் உலகம்தான். அதே நேரத்தில் கல்வி, அதிகாரமயமாகி வருவதையும் வேதனையோடும் விமர்சனத்தோடும் மறக்காமல்
சுட்டிக்காட்டும் தொகுப்பு இது.