{"product_id":"putin-russiavin-irumbukkaram","title":"புதின்: ரஷ்யாவின் இரும்புக்கரம்","description":"\u003cp\u003eசோவியத் யூனியன் சிதறிய பிறகும் ரஷ்யா உறுதியோடு நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் புதினின் கால் நூற்றாண்டு கால இரும்பு ஆட்சி. புதின் ஒரு சர்வாதிகாரி, எதிர்ப்பவர்களை இரக்கமின்றி அழித்தொழிப்பவர் என்கிற குற்றச்சாட்டு ஒரு பக்கம். சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் கரங்களுக்குள் ரஷ்யா சென்றுவிடாமல் தடுத்து நிறுத்தும் ரட்சகர் புதின் எனும் பிம்பம் மறு பக்கம். இதில் எது உண்மை? புதினின் பின்னணி என்ன? அவருடைய ஆட்சி எப்படிப்பட்டது? ரஷ்ய மக்கள் அவரை எவ்வாறு காண்கின்றனர்? கால் நூற்றாண்டு காலமாக தன் கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யாவை வைத்திருப்பது எப்படி? சர்வதேச அரசியலில் அவரது இடம் எத்தகையது? சோவியத் யூனியனில் இருந்து உடைந்த நாடுகளை புதின் கட்டுப்படுத்த நினைப்பது எதனால்? ரஷ்யா – உக்ரைன் போர் முடிவற்று நீள்வது ஏன்? புதினின் வாழ்வோடு நவீன ரஷ்யாவின் வரலாற்றையும் ராம் அப்பண்ணசாமி விவரிக்கும்போது எல்லாப் புதிர்களுக்கும் விடைகள் கிடைக்கின்றன. உலக அரசியல் போக்கைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390348071215,"sku":"BK1446","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/putin-russiavin-irumbukkaram.jpg?v=1788008201","url":"https:\/\/siruvarbooks.com\/products\/putin-russiavin-irumbukkaram","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}