Books For Children
சாலுவின் ப்ளூபெர்ரி
சாலுவின் ப்ளூபெர்ரி
ராபர்ட் மெக்லோஸ்கே, 1914ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் பிறந்தார். சிறுவர் இலக்கிய எழுத்தாளர், ஓவியர். இவர் எழுதிய ஒன்பது புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் புகழ்பெற்ற ‘கால்டிகோட்’ விருதைத் தட்டிச் சென்றன. ‘வாத்துக்களுக்கு வழி தாருங்கள்’, ‘சாலுவின் ப்ளூ பெர்ரி’, ‘அற்புத நேரம்’. ‘மெய்ன் தீவில் ஒரு அதிகாலை’ போன்ற புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ராபர்ட் மெக்லோஸ்கே, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். சாலுவின் ப்ளூ பெர்ரி, சிறந்த 100 சிறுவர் புத்தகங்களில் ஒன்றாக பள்ளி நூலகக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டது. சிறுமி சால், அம்மாவோடு இணைந்து ப்ளூ பெர்ரி வளரும் மலைகளுக்குச் செல்கிறாள். ஆசையாசையாக பழங்களைப் பறித்து சாப்பிடும் ஆர்வத்தில் அம்மாவை மறந்து போகிறாள். அதே நேரத்தில் மலையின் மறுபக்கத்திலிருந்து ஒரு கரடியும், குட்டியும் வந்து சேருகின்றன. குட்டிக்கரடியும் அம்மாவிடமிருந்து தொலைந்து போகிறது. தொலைந்த இருவரும் திரும்பக் கிடைத்தார்களா? காப்பாற்றியவர் யார்? என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடு இருக்கிறீர்களா? நீங்களும் இந்தக் கதையின் வழியே மலைப் பாதையில் நுழைந்து செல்லுங்கள்.
சாலுவின் ப்ளூபெர்ரி,shaaluvin blueberry,books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.