{"product_id":"ulloli-issaikkavithai","title":"உள்ளொளி","description":"\u003cp\u003eஉள்ளொளி இசைக் கவிதைகள்\u003cbr\u003e\nஉயிர்களின் உயிரே உலகின் உணர்வே... . காதல் நிலைத்திடும் கருணையின் உருவே...\u003cbr\u003e\nதோற்றங்கள் பலவாய் தோகையின் மகிழ்வாய்... தோரண அழகாய் தோன்றும் வியப்பே...\u003cbr\u003e\nநீயின்றி புவியில் நிம்மதி இல்லை... நேசத்தை சுமக்கா தாய்மடி இல்லை...\u003cbr\u003e\n* (உயிர்களின் உயிரே..)\u003cbr\u003e\nதாகத்தைப் தீர்க்கும் தரணியின் தருவே... தளிர்களின் சிரிப்பில் வாழ்ந்திடும் உருவே\u003cbr\u003e\nமின்னலாய் புன்னகை மேகமாய் எழில்நடை... விண்ணின் விளக்கம் உன்னில் பிறக்கும்\u003cbr\u003e\nஆறுதல் அளிக்கும் ஆறுதல் ஆவாய்... அகங்கள் உயிர்க்கும் அருமருந்து ஆவாய்...\u003cbr\u003e\nவேதனைப் போக்கும் விந்தையின் கருநீ.... விண்ணில் பூக்கும் விருட்சத்தின் மணம்நீ... (உயிர்களின் உயிரே..)\u003cbr\u003e\nமானுடம் சுமக்கும் மயக்கங்கள் தெளிய... மாயங்கள் விலக்கும் மாபூதத் திருவே...\u003cbr\u003e\nஉன் விளையாட்டில் உயிர்த்தெழும் வையம்... பூமியின் தாகம் காதலாய் பூக்கும்...\u003cbr\u003e\nஏரிக் குளங்களின் ஏக்கத்தை தீர்ப்பாய்.... ஆறாய் அமுதாய் அவதார இயல்பாய்...\u003cbr\u003e\nமானுடத் தோற்றத்தின் மாதவக் கூறே.... மாமழையாக மலர்ந்திடும் மகிழ்வே...\u003cbr\u003e\n(உயிர்களின் உயிரே..)\u003cbr\u003e\n \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390203859247,"sku":"BK1805","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/ulloli-issaikkavithai.jpg?v=1788006814","url":"https:\/\/siruvarbooks.com\/products\/ulloli-issaikkavithai","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}