Books For Children
வழிகூறும் மூளை
வழிகூறும் மூளை
மானுட நடத்தை அல்லது இயல்பு என்பது காலங்காலமாக ஒரு புதிராகவே இருந்துள்ளது. மானுட உள்ளம், இயல்பையும் நடத்தையையும் கொண்டு செலுத்துவது என்பது தெரிந்திருந்தாலும், தனது உள்ளம் என்பதைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு அந்நியோன்னியமானது உலகில் எதுவும் இல்லை என்றாலும் அது குறித்து மானுடத்தின் காத்திரமான ஞானம் குறைவே. அறிவியல் வராத அந்த தளத்தை தத்துவமும், கலை இலக்கியமும் இன்னும் அருளுரைகள், ஞான திருஷ்டிகள், கட்டுக்கதைகள் எல்லாம் ஆக்கிரமித்து கோலோச்சிக் கொண்டிருந்தன. புகை மண்டலமும், மஞ்சும், பனியுமாய் இவை மூடியிருந்த இந்த இருட் பரப்பை 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து வளர்ந்து வரும் மூளை அறிவியல் புத்தொளி பாய்ச்சி துலங்கச் செய்து வருகின்றது. இந்த ஒளியைக் கொண்டு வந்த ஆளுமைகளில் முக்கியமானவர் விளையனூர். எஸ்.ராமச்சந்திரன். தனது பிரத்யேகமான மெல்லிய நகைச்சுவையோடு கூடிய கதையாடலில் அவர் ஆங்கிலத்தில் விளக்கியதை துல்லியமான தமிழில் தந்துதுள்ளார். பேரா. கு.வி. கிருஷ்ணமூர்த்தி.