{"product_id":"william-faulkner-thernthedukkappatta-sirukathaigal","title":"வில்லியம் ஃபாக்னர் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்","description":"\u003cp\u003eகவிதைக்குப் பிறகு அதிக சவாலானது சிறுகதை என்பது வில்லியம் ஃபாக்னரின் கூற்று. ரத்தமும் சதையுமான வாழ்வைக் கீறி அதன் பொருளைக் கண்டடைவதன் பொருட்டு ஃபாக்னர் மேற்கொள்ளும் பயணத்தைப் பார்க்கும்போது இச்சவாலில் வேறெவரையும் விட அதிகம் வெற்றி பெற்றவர் அவர்தான் என்பது புலனாகிறது. ஃபாக்னரின் கதைகளில் மனிதர்களுக்குச் சமமாக இடங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. கற்பனைக்கு இணையாக யதார்த்தமும் வரலாறும் இடம் பிடித்துக்கொள்கின்றன. எளிமையான, இயல்பான ஒரு நிகழ்வைக் கூட அசாதாரணமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதில் ஃபாக்னர் நிபுணர். போரும் வாழ்வும், காதலும் சோகமும், வன்முறையும் நேசமும், மரபும் மரபுமீறலும் ஃபாக்னரின் எழுத்துகளில் அழகாகக் கைகோர்க்கின்றன. இலக்கியத்துக்கான நோபல் விருது பெற்ற ஃபாக்னரின் சிறுகதைகளிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மிகச் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார் கார்குழலி.\u003c\/p\u003e","brand":"கிழக்கு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390385492271,"sku":"BK1494","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/william-faulkner-thernthedukkappatta-sirukathaigal.jpg?v=1788008272","url":"https:\/\/siruvarbooks.com\/products\/william-faulkner-thernthedukkappatta-sirukathaigal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}